Tuesday 7 January 2014

சட்டம் ஏன் சிக்கலாகிறது?

நடுநிலை மனிதர்கள்
இங்கே யாருமில்லை!

எல்லோரும் ஒரு
சாயத்தை பூசிக்கொண்டு தான்
திரிகிறார்கள்.

முக மூடிகளை அணிவதிலும்
அணிவிப்பதிலும் இவர்கள்
அலாதி இன்பம் கொள்கிறார்கள்.

சேற்று மூட்டைகளை தலைமுறைகளுக்கு
மாற்றுவதை
கடமை என கருதுகின்றார்கள்...

சாதி என்றோர் மூட்டை...
சமயம் என்றோர்..மூட்டை
இனம் என்றோர்...
இன்னும் இன்னும் ....
எத்தனை எத்தனையோ...

எண்ண முடியுமா இந்த
ஏளனத்தை...
மனித குலம் வளர்த்த
பெரு முட்டாள்தனம்...

எல்லோருக்கு பின்னாலும்
இயக்குகிற சக்தி
ஒன்றுண்டு...
சாதி இனம் மதம் மொழி பகை...
பட்டியல் ஏராளம்.

எல்லோர் சொல்லுக்கு
பின்னாலும் ஏதோவோர்
முத்திரை இன்னமும் இங்குண்டு....

சட்டம் இயற்றுவோர் சொல்லில்
நடுநிலை வாய்க்கட்டும்..

மனிதகுலத்திற்கு
மனிதநேயத்திற்கு
பெருங் கேடயமாய்
மாறட்டும்
இம்மானுட சட்டம்!!! 

Friday 20 December 2013

எட்டாக்கனி

சில நேரங்களில் நீதி என்பது வளமை, வலிமை குறைந்தவர்களுக்கு எட்டாக்கனி என்பது இருக்கக்கூடாது என்பதே நம் எண்ணம் என்றாலும் நடைமுறை நிகழ்வுகளில் அப்படி இல்லை என்பதே உண்மை.

இந்நிலை இந்தியா போன்ற முன்னேறும் நாடுகளில் அதிக அளவிலே உள்ளது என்பதற்கு மிக முக்கிய காரணங்களைப் பற்றி நாம் விவாதிப்போம்...

தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

இந்த சக்திவேல் பாண்டியன்...

Sunday 17 November 2013

Great things

Advocacy is one of the greatest thing in the world...
It is not consulting the people...
It is lit a lamp in the dark minds of the innocent people...